Friday, September 2, 2011

Aariro Aaraariro Idhu Thandhaiyin Thaalaattu

படம் : தெய்வத்திருமகள் 
பாடல் : ஆரிரோ ஆராரிரோ 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் 
இசை : ஜீ. வீ. பிரகாஷ் 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு ஒ ஒ ....
தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஒ ஒ ---
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் 
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே 
கருவறையில்லை என்றபோதும் சுமந்திடத் தோணுதே 
விழியோரம் ஈரம் வந்து குடைக் கேட்குதே ...

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு 

முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே 
மழை நின்றுப் போனால் என்ன மரம் தூறுதே 
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே 
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே 
இதுப் போல் ஆனந்தம் வேறில்லையே 
இரு மனம் ஒன்று சேர்ந்து  இங்கே மெளனத்தில் பேசுதே  
ஒரு நொடிப் போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே 
விழியோரம் ஈரம் வந்துக் குடைக் கேட்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு 

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஒர்ப் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே 
அழகாய் வீட்டில் விளையாடுதே 
அன்பின் விதை இங்கே மரமானதே 
கடவுளைப் பார்த்ததில்லை இவளதுக் கண்கள் காட்டுதே
பாசத்தின்  முன்பு இன்று உலகின்  அறிவுகள் தோற்க்குதே
விழியோரம் ஈரம் வந்துக் குடைக் கேட்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு
 

1 comment:

  1. அருமையானப் பாடல் வரிகள்

    ReplyDelete