Thursday, September 1, 2011

Indha Veenaikku Theriyadhu

பாடல் : இந்த வீணைக்குத் தெரியாது 
சீரியல் பெயர் : ரயில் ஸ்நேகம் 
இயற்றியவர் :
பாடியவர் : கே. எஸ். சித்ரா 
இசை :  வீ. எஸ். நரசிம்ஹன் 
ராகம் : சஹானா

இந்த வீணைக்குத்  தெரியாது இதைச்  செய்தவன் யார் என்று 
இந்த வீணைக்குத்  தெரியாது இதைச்  செய்தவன் யார் என்று 
என் சொந்தப் பிள்ளையும் அறியாது அதைத்  தந்தவன் யார் என்று 
எனக்குள் அழுது ரசிக்கின்றேன் இரண்டையும் மடியில் சுமக்கின்றேன் 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல்த் தானே 
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது கிளைத் தானே 
எங்கோ அழுதக் கண்ணீர்த் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது 
தாகம் குருவிகள் தாகம் தீர  கங்கை இன்னும் நடக்கிறது 

இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைத் தானே
சொர்கம்  நரகம் என்பது எல்லாம் சூழ்நிலைக் கொடுத்த நிறம் தானே 
உள்ளம் என்பது சரியாய் இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது 
உதிரப் போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 
என் சொந்தப் பிள்ளையும் அறியாது அதைத் தந்தவன் யார் என்று 
எனக்குள் அழுது ரசிக்கின்றேன் இரண்டையும் மடியில் சுமக்கின்றேன் 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று

No comments:

Post a Comment