Sunday, September 15, 2013

Thaalaattum Poongaattru Naanallava


பாட்டு                : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா  
படம்                  :  கோபுர வாசலிலே 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை                : இளையராஜா 
பாடியவர்         : எஸ். ஜானகி
ராகம்                :சிம்மேந்திரமத்திமம்


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா 
வருவாயோ....வாராயோ...
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே 
என் நெஞ்சமே உன் தஞ்சமே... 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா....

நள்ளிரவில் நான் கண் விழிக்க 
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க 
பஞ்சனையில் நீ முள்விரித்தாய் 
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக 
காணும்  கோலங்கள் யாவும் நீயாக 
வாசலில் மன்னா உன் தேர் வர... ஆடுது பூந்தோரணம் 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா... 

எப்பொழுதும் உன் சொப்பனங்கள் 
முப்பொழுதும் உன் கற்பனைகள் 
சிந்தனையில் நம் சங்கமங்கள் 
ஒன்றிரெண்ட என் சஞ்சலங்கள் 
காலை நான் பாடும் காதல் பூபாளம் 
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் 
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா 
வருவாயோ....வாராயோ...
ஓ நெஞ்சமே... ஓ நெஞ்சமே... 
என் நெஞ்சமே உன் தஞ்சமே 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா... 

Thursday, January 19, 2012

Swasame Swasame



பாடல் -                   சுவாசமே சுவாசமே
படம் -                      தெனாலி
பாடியவர்கள் -      எஸ். பி. பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
பாடலாசிரியர் -    பா. விஜய்
இசை -                     ஏ. ஆர். ரெஹ்மான்
ராகம் -                     யமன் கல்யாண் ( அல்லது )  கல்யாணி


பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             இதயம் தான் சரிந்ததே உன்னிடம்  மெல்ல
             சுவாசமே சுவாசமே

ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
பெண் :சுவாசமே சுவாசமே
             சுவாசமே சுவாசமே
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             இதயம் தான் சரிந்ததே உன்னிடம்  மெல்ல
ஆண் : வாசமே வாசமே
             வாசமே வாசமே
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             கண்கள்ரெண்டில் கண்கள் செல்ல
             சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா

பெண் : இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
              வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
              இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
              வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆண் :  ஆறறிவோடு உயிரதுக் கொண்டேன்
              ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
பெண் :  இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
              செயற்கைக் கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய்
ஆண் :  அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
பெண் :  அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
              சுவாசமே சுவாசமே

ஆண் :    இசைத் தட்டுப் போல இருந்த என் நெஞ்சை
                பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
பெண் :   நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
               நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
ஆண் :   நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
             முழுநிலவாக என்னுடன் சேர்ந்தாய்
பெண் :  கிழக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே
ஆண் :   வாசமே வாசமே
பெண் :  என்ன சொல்லி
ஆண் :   என்ன சொல்லி என்னைச் சொல்ல
பெண்:   காதல் என்னைக் கையால் தள்ள

ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா

பெண் : சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             சுவாசமே...............
            

Poovaasam Purappadum


பாடல் :               பூவாசம் புறப்படும் பெண்ணே
படம் :                  அன்பே சிவம்
பாடியவர்கள் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
இசை :                 வித்யாசாகர்
இயற்றியவர் :
ராகம் :                 சுத்தசாரங் (ஹிந்துஸ்தானி ராகம்)


ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே  நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஆண் :   புள்ளி  சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
              உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் :  கோடுக்கூட ஓவியத்தின் பாகமே
              ஊடல்கூட காதல் என்று ஆகுமே
ஆண் :  ஒரு வானம் வரைய நீல வண்ணம்
              நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண் :  என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
              விரல் என்னும் கோல் கொண்டு
              நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆ ஆ ........
ஆண் :  பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

பெண் :  ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் :   உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் :  பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் :  ஆண் தொடாத பாகம்தன்னில் உள்ளது
பெண் :  நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்  
              பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண் :  மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைப் போல்
              மடியோடு  விழுந்தாயே வா ஆ ஆ ஆ .....
              பூவாசம் புறப்படும் பெண்ணே பூ நான் வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே தீ நான் வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும்  ஓவியம் நீயடி..............
பெண் :  ஆ ஆ ஆ ஆ    

Friday, September 2, 2011

Aariro Aaraariro Idhu Thandhaiyin Thaalaattu

படம் : தெய்வத்திருமகள் 
பாடல் : ஆரிரோ ஆராரிரோ 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் 
இசை : ஜீ. வீ. பிரகாஷ் 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு ஒ ஒ ....
தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஒ ஒ ---
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் 
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே 
கருவறையில்லை என்றபோதும் சுமந்திடத் தோணுதே 
விழியோரம் ஈரம் வந்து குடைக் கேட்குதே ...

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு 

முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே 
மழை நின்றுப் போனால் என்ன மரம் தூறுதே 
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே 
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே 
இதுப் போல் ஆனந்தம் வேறில்லையே 
இரு மனம் ஒன்று சேர்ந்து  இங்கே மெளனத்தில் பேசுதே  
ஒரு நொடிப் போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே 
விழியோரம் ஈரம் வந்துக் குடைக் கேட்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு 

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஒர்ப் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே 
அழகாய் வீட்டில் விளையாடுதே 
அன்பின் விதை இங்கே மரமானதே 
கடவுளைப் பார்த்ததில்லை இவளதுக் கண்கள் காட்டுதே
பாசத்தின்  முன்பு இன்று உலகின்  அறிவுகள் தோற்க்குதே
விழியோரம் ஈரம் வந்துக் குடைக் கேட்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின்  தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழைலையின் மொழிக் கேட்டு
 

Thursday, September 1, 2011

Kanna Varuvaaya

பாடல் - கண்ணா வருவாயா
படம் -  மனதில் உறுதி வேண்டும் 
பாடியவர்கள் - கே. ஜே.  யேசுதாஸ், கே.எஸ். சித்ரா 
இயற்றியவர் -  கவிஞர் வாலி 
இசை - இளயராஜா 
ராகம் - கௌரி மனோஹரி 

பெண் :    கண்ணா வருவாயா 
                 கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 
                 மன்னன் வரும் பாதை மங்கைப்  பார்க்கிறாள் 
                 மாலை மலர் சோலை நதியோரம் நடந்து.........
                 கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 

கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ 

ஆண் :   நீல வானும் நிலவும் நீரும் நீஎனக் காண்கிறேன் 
பெண் :  உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன் 
ஆண் :  கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல்  
பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் 
ஆண் :  வேரில்லையே  பிருந்தாவனம் 
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் 
ஆண் :  சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ .............
               மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான் 
               மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........
               மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் 

ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு
             மெல்லியச்  சிற்றிடைத் தொட்டு
             மோகம் தீர்க்கவா.....
             மல்லிகைப் பஞ்சனையிட்டு 
             மெல்லியச்  சிற்றிடைத் தொட்டு 
             மோகம் தீர்க்கவா 

பெண் : மன்மத மந்திரம் சொல்லி 
              வந்தனள் சுந்தரவல்லி
              ராகம் சேர்க்கவா..........
              மன்மத மந்திரம் சொல்லி 
              வந்தனள் சுந்தரவல்லி
              ராகம் சேர்க்கவா...........

ஆண் : கொடியிடை ஓடிவதன்  முன்னம்
             மடியினில் எடுத்திடவா 

பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம்
              மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு  மழையிலே 
பெண் : இருவர் உடலும் நனையும்  பொழுதிலே 
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே............. 
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 
ஆண் :  மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் 
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து 
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்  

கோரஸ்  :  கண்ணா கண்ணா கண்ணா ஆஆஆஆஆஆஆ............

Indha Veenaikku Theriyadhu

பாடல் : இந்த வீணைக்குத் தெரியாது 
சீரியல் பெயர் : ரயில் ஸ்நேகம் 
இயற்றியவர் :
பாடியவர் : கே. எஸ். சித்ரா 
இசை :  வீ. எஸ். நரசிம்ஹன் 
ராகம் : சஹானா

இந்த வீணைக்குத்  தெரியாது இதைச்  செய்தவன் யார் என்று 
இந்த வீணைக்குத்  தெரியாது இதைச்  செய்தவன் யார் என்று 
என் சொந்தப் பிள்ளையும் அறியாது அதைத்  தந்தவன் யார் என்று 
எனக்குள் அழுது ரசிக்கின்றேன் இரண்டையும் மடியில் சுமக்கின்றேன் 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல்த் தானே 
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது கிளைத் தானே 
எங்கோ அழுதக் கண்ணீர்த் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது 
தாகம் குருவிகள் தாகம் தீர  கங்கை இன்னும் நடக்கிறது 

இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைத் தானே
சொர்கம்  நரகம் என்பது எல்லாம் சூழ்நிலைக் கொடுத்த நிறம் தானே 
உள்ளம் என்பது சரியாய் இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது 
உதிரப் போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று 
என் சொந்தப் பிள்ளையும் அறியாது அதைத் தந்தவன் யார் என்று 
எனக்குள் அழுது ரசிக்கின்றேன் இரண்டையும் மடியில் சுமக்கின்றேன் 
இந்த வீணைக்குத் தெரியாது இதைச் செய்தவன் யார் என்று

Vizhigalil Oru Vaanavil

படம் : தெய்வத்திருமகள் 
பாடியவர் : சைந்தவி 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் 
இசை : ஜி. வி. பிரகாஷ் 

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டுப்  பேசுதே..
இது என்னப் புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னாகுமோ  இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன் ..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்னே  என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டுப் பேசுதே 
இது என்னப் புது வானிலை...மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மெய்யானவன் அன்பில் 
யார் இவன் யார் இவன் 
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில் 
இனம்புரியா.... உறவிதுவோ 
என் தேரில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது 
மனம் எங்கும் மணம்

விழிகளில் ஒரு வானவில்... இமைகளை தொட்டுப் பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காகப்  பேசினேன்..
யார் எனக்காகப்  பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது 
நான் பெண்ணாகிறேன்  இங்கே..
தயக்கங்களால் திணறுகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..

தன ந ந ன ................