Thursday, January 19, 2012

Swasame Swasame



பாடல் -                   சுவாசமே சுவாசமே
படம் -                      தெனாலி
பாடியவர்கள் -      எஸ். பி. பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
பாடலாசிரியர் -    பா. விஜய்
இசை -                     ஏ. ஆர். ரெஹ்மான்
ராகம் -                     யமன் கல்யாண் ( அல்லது )  கல்யாணி


பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             இதயம் தான் சரிந்ததே உன்னிடம்  மெல்ல
             சுவாசமே சுவாசமே

ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
பெண் :சுவாசமே சுவாசமே
             சுவாசமே சுவாசமே
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             காதல் என்னைக் கையால் தள்ள
             இதயம் தான் சரிந்ததே உன்னிடம்  மெல்ல
ஆண் : வாசமே வாசமே
             வாசமே வாசமே
             என்ன சொல்லி என்னைச் சொல்ல
             கண்கள்ரெண்டில் கண்கள் செல்ல
             சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா

பெண் : இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
              வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
              இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
              வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆண் :  ஆறறிவோடு உயிரதுக் கொண்டேன்
              ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
பெண் :  இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
              செயற்கைக் கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய்
ஆண் :  அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
பெண் :  அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
              சுவாசமே சுவாசமே

ஆண் :    இசைத் தட்டுப் போல இருந்த என் நெஞ்சை
                பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
பெண் :   நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
               நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
ஆண் :   நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
             முழுநிலவாக என்னுடன் சேர்ந்தாய்
பெண் :  கிழக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே
ஆண் :   வாசமே வாசமே
பெண் :  என்ன சொல்லி
ஆண் :   என்ன சொல்லி என்னைச் சொல்ல
பெண்:   காதல் என்னைக் கையால் தள்ள

ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா

பெண் : சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
             ஜரிகைப் பூவாகி வா
             மின்னல் மழையாகி வா
             உயிரின் மூச்சாகி வா
             சுவாசமே...............
            

Poovaasam Purappadum


பாடல் :               பூவாசம் புறப்படும் பெண்ணே
படம் :                  அன்பே சிவம்
பாடியவர்கள் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
இசை :                 வித்யாசாகர்
இயற்றியவர் :
ராகம் :                 சுத்தசாரங் (ஹிந்துஸ்தானி ராகம்)


ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே  நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஆண் :   புள்ளி  சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
              உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் :  கோடுக்கூட ஓவியத்தின் பாகமே
              ஊடல்கூட காதல் என்று ஆகுமே
ஆண் :  ஒரு வானம் வரைய நீல வண்ணம்
              நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண் :  என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
              விரல் என்னும் கோல் கொண்டு
              நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆ ஆ ........
ஆண் :  பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

பெண் :  ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் :   உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் :  பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் :  ஆண் தொடாத பாகம்தன்னில் உள்ளது
பெண் :  நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்  
              பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண் :  மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைப் போல்
              மடியோடு  விழுந்தாயே வா ஆ ஆ ஆ .....
              பூவாசம் புறப்படும் பெண்ணே பூ நான் வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே தீ நான் வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும்  ஓவியம் நீயடி..............
பெண் :  ஆ ஆ ஆ ஆ